மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித்ஷா, கொரோனா அறிகுறி இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக தனிமையில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பின்னர், மருத்துவ பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதால், மருத்துவர் ஆலோசனைப்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று உள்ளபோதும், உடல்நிலை சீராக இருப்பதால், கடந்த சில நாட்களில் தன்னை சந்தித்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post