இந்தியாவில் இதுவரை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 34 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்வதற்காக 213 ஆய்வகங்கள் உள்ளன. இதில் 146 ஆய்வகங்கள் அரசுக்கு சொந்தமானவை ஆகும். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சார்பில் நேற்று வரை ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 330 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதில் ஆறாயிரத்து 872 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 15 ஆயிரத்து 663 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், அதில் 433 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post