கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக, சீனாவுக்கு ஏர் இந்தியா விமான சேவை ஜூன் 30ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அங்குள்ள முக்கிய நகரங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்பட்டு வந்த விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஷாங்காய் மற்றும் ஹாங்காங் நகரங்களுக்கு மார்ச் 28ம் தேதி வரை விமானங்கள் இயக்கப்படாது என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், தற்போது ஜூன் 30ம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதி வரை சீனாவுக்கு விமான சேவையை நிறுத்தி வைத்துள்ள ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ ஆகிய நிறுவனங்கள், சேவையை நிறுத்தி வைப்பதற்கான காலநீட்டிப்பை இன்னும் அறிவிக்கவில்லை.