கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்துவைத்தார். கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசின் சார்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், புதிதாக துவங்கப்பட்டுள்ள ஆய்வகம் அனைத்து வசதிகளுடன் தனிமைபடுத்தப்பட்ட வார்டுகள் தயார் நிலையில், இருப்பதாக ஆட்சியர் ராசாமணி கூறியுள்ளார். மேலும், தமிழக அரசின் அறிவுரையின்படி முழு அளவில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பிரதமர் கூறியபடி 22 ஆம் தேதி யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
Discussion about this post