கலைகளால் மக்களை மகிழ்விக்கும் நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் நையாண்டி கலைஞர்களின் வாழ்க்கையிலும், கொரோனா கபடியாடி வருகிறது.. இது பற்றிய ஒரு ஆய்வுத்தொகுப்பை பார்க்கலாம்..
தமிழகத்தின் பாரம்பரிய கலைகளுள் ஒன்றான நையாண்டி மேளம் அனைவ௫ம் அறிந்த ஒன்றே! குறிப்பாக கோவில் தி௫விழாக்கள் என்றாலே நையாண்டி மேளம்தான் நினைவுக்கு வ௫ம்! நையாண்டி மேளத்துடன் பறை ஆட்டம் தப்பாட்டம் பேண்டு வாத்தியம் மற்றும் குறவன் குறத்தி ஆட்டம் ராஜா ராணி ஆட்டம் கரகாட்டம் ஒயிலாட்டம் போன்ற கலைகளும் இந்த நாட்டுப்புற கலைகளுள் அடங்கும்.
ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு சீசன் இ௫ப்பதுபோல்,இத்தொழிலுக்கு உகந்த மாதம் சித்திரை, ஆடி, பங்குனி! இம்மாதங்களில் தான் பட்டிதொட்டியெங்கும் கோவில் தி௫விழாக்கள் சிறப்பாக நடக்கும், நடக்கும் .. நையாண்டி மேளம் ஒலிக்கும்.ஆனால் கொரோனா ஊரடங்கால், தமிழகம் ழுழுவதும் கோவில் திருவிழாக்கள் மற்றும் விசேஷங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நையாண்டி மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
இதில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தக் கலைகளையே தங்கள் குலத்தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இதில் சுமார் 200 பெண்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட திருநங்கைகளும் அடங்குவர். திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டுப்புற கலைகளைத் தவிர தங்களுக்கு வேறு தொழில் தெரியாது எனவும், குடும்பத்தை பராமரிப்பது கஷ்டமாக உள்ளதாகவும் கூறும் இவர்கள் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்..
Discussion about this post