தமிழகத்தில் கொரோனா தொற்று இறப்பு விகிதம் குறைவதற்கு சித்த மருத்துவமும், அலோபதி மருத்துவமும் இரு கண்களாக செயல்படுகிறது என தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டை மண்டலம், கொடுங்கையூர் பகுதியில் அமைச்சர் பாண்டியராஜன் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தண்டையார்பேட்டை மண்டலத்தில் தற்போது கொரோனா தொற்று விகிதம் குறைந்து வருவதாகக் கூறினார். அம்பேத்கர் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ மையத்தில் 224 பேர் அனுமதிக்கப்பட்டதில், 48 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாக தெரிவித்தார். அலோபதி மற்றும் சித்த மருத்துவம் அடிப்படையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பலனளித்து வருவதாகவும் கூறினார்.
Discussion about this post