சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், சீனாவில் மட்டும் இதுவரை 630 பேர் பலியாகி உள்ளனர். அந்நாடு முழுவதும் சுமார் 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வூகான் மாகாணத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
Discussion about this post