இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரேநாளில், 40 ஆயிரத்து 425 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில், 3 லட்சத்து 90 ஆயிரத்து 459 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 7 லட்சத்து 87 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 27 ஆயிரத்து 497 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில், பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 10 ஆயிரத்து 455 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்
ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில், ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 793 பேரும், கர்நாடகத்தில் 63 ஆயிரத்து 772 பேரும், ஆந்திராவில் 49 ஆயிரத்து 650 பேரும், உத்தரபிரதேசத்தில் 49 ஆயிரத்து 247 பேரும், குஜராத்தில் 48 ஆயிரத்து 355 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல், தெலங்கானா, மேற்குவங்கம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது.
Discussion about this post