அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 482 பேர் கொரோனாவுக்கு பாலியாகியுள்ளனர். இதனிடையே, அபாய கட்டத்தில் இருந்து அமெரிக்கா மீண்டுவிட்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், உலகளவில் பெரும் பாதிப்பை உருவாக்கிவரும் நிலையில், அமெரிக்கா கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்து 44 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தநிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனாவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைக்கைகள் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்கா அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாகக் கூறினார்.
Discussion about this post