உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசின் பிறப்பிடம் சீனாவாக கருதப்படும் நிலையில், அங்குள்ள வூகான் கடல் உணவு சந்தையில் இருந்தே நோய் தொற்று பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் தென்பட்டதும், கடந்த ஜனவரி மாதம் வூகான் சந்தை மூடப்பட்டதுடன், அங்கிருந்து விற்பனை செய்யப்படும் விலங்குகளை சாப்பிடவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு வூகான் சந்தை முக்கிய காரணியாக இருந்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் வூகான் சந்தையின் பங்கு எந்த அளவுக்கு உள்ளது என்பது இன்னும் தெரியவில்லை என்றும், கூடுதலாக ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனத்தின் உணவு பாதுகாப்பு ஆய்வாளர் பீட்டர் பென் எம்பாரிக் தெரிவித்துள்ளார். கொரோனா பரவ வூகான் சந்தை ஆதாரமாக இருக்கலாம் அல்லது சந்தையின் சுற்றுவட்டார பகுதிகளில் நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் பீட்டர் பென் கூறியுள்ளார்.
Discussion about this post