800 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் பாலிவுட் திரையுலகம்!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிகை நடவடிகையாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், தற்போது வெளியாகியுள்ள “பாகி 3” மற்றும் “அங்க்ரேஸி மீடியம்” ஆகிய திரைப்படங்களின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ராதே திரைப்படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பாலிவுட்டில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அக்ஷய்குமாரின் “சூர்யவான்ஷி” உள்ளிட்ட திரைப்படங்களை வெளியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் மூலம், பாலிவுட் திரையுலகிற்கு சுமார் 800 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Exit mobile version