சென்னை எழும்பூர் பகுதியில் தொண்டு நிறுவனம் சார்பில் பொதுமக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை எழும்பூர் பூபதி நகர் மற்றும் சாமி தெருவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கை கால்களை சுத்தம் செய்வதற்கான சோப்பு மற்றும் தண்ணீர் வைப்பதற்கான பக்கெட் வைக்கப்பட்டன. இதன் மூலம் அந்த பகுதியில் செல்பவர்கள் கட்டாயம் கை, கால்களை கழுவிவிட்டு செல்ல வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சிலம்பாட்டம், தப்பாட்டம் மூலமாக கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதேபோல் அப்பகுதியில் மருத்துவ முகாமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கிய காவல்துறை துணை ஆணையர் தர்மராஜ், பொதுமக்கள் கவனத்துடன் செயல்பட்டால் மட்டுமே கொரோனாவை விரட்டமுடியும் என கூறினார்.
Discussion about this post