இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 48 ஆயிரத்து 916 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 48 ஆயிரத்து 916 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 13 லட்சத்து 36 ஆயிரத்து 861 ஆக அதிகரித்துள்ளது. 4 லட்சத்து 56 ஆயிரத்து 71 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 8 லட்சத்து 49 ஆயிரத்து 431 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 31 ஆயிரத்து 358 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில், பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 57 ஆயிரத்து 117 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில்
ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 297 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில், ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 389 பேரும், கர்நாடகத்தில் 85 ஆயிரத்து 870 பேரும், ஆந்திராவில் 80 ஆயிரத்து 858 பேரும், உத்தரபிரதேசத்தில் 60 ஆயிரத்து 771 பேரும், மேற்குவங்கத்தில் 53 ஆயிரத்து 973 பேரும், குஜராத்தில் 53 ஆயிரத்து 545 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல், தெலங்கானா, ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
Discussion about this post