இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் 152-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் 2 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 107ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 31 பேரும், கேரளாவில் 22 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, டெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ராம் மனோகர் லோகியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்.
Discussion about this post