பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக திமுகவில் இருந்து நடிகர் ராதாரவியை தற்காலிகமாக நீக்கம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
me too விவகாரம் குறித்து நடிகர் ராதா ரவி பல்வேறு சர்ச்சைக் கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் நடைபெற்ற நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ராதாரவி, நயன்தாரா ஒரு நல்ல நடிகை, என்றும் இங்கு பேயாகவும் நடிக்கிறார், தெலுங்கில் சீதையாகவும் நடிக்கிறார் என்று கூறினார். இன்று யார்வேண்டுமானாலும் சீதையாக நடிக்கலாம், ஒரு காலத்தில் சீதையாக நடிக்க வேண்டும் என்றால், கே.ஆர்.விஜயாவை அழைப்போம் என்று இரட்டை அர்த்தத்தில் ராதாரவி பேசி இருந்தார்.
இந்த நிலையில் திமுகவின் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக நடிகர் ராதாரவியை தற்காலிமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் நடிகர் ராதாரவி நீக்கப்பட்டதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post