டோரியன் புயல் நகர்வு குறித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தவறான ட்விட்டர் பதிவை நியாயப்படுத்தும் வகையில், வரைபடம் திருத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
பஹாமஸ் தீவுகளை சிதைத்த டோரியன் புயல், அமெரிக்காவின் தெற்கு கரோலினாவை நோக்கி நகர உள்ள நிலையில், இன்று விர்ஜீனியா கடலோரப் பகுதிகளில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், டோரியன் புயல் அலபாமா மாநிலத்தை தாக்கும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ வரைபடமும் வெளியாகாத நிலையில், அவரின் இந்த பதிவால் சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், டோரியன் புயல் நகர்வு குறித்த வரைபடத்தைக் காண்பித்தார். அதில், அலபாமாவையும் டோரியன் தாக்கும் என்பதைக் குறிப்பிடும் வகையில் கருப்பு வண்ணத்தில் திருத்தப்பட்டிருந்தது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய சரமாரியான கேள்விக்கு டிரம்ப் முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.
அலபாமாவை டோரியன் தாக்க வாய்ப்பில்லை என தேசிய புயல் மையம் கூறியுள்ள நிலையில், அதிபரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.