நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது பெய்துள்ள இந்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழையினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும், மழைநீர் வீணாகாமல் நீர்நிலைகளில் சேமிக்கப்படுவதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தொடர் மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், குடிநீர் தேவைகள் நிறைவேறுவதோடு, விவசாயமும் செழிக்கும் என பொதுமக்களும், விவசாயிகளும் தெரிவித்தனர்.
Discussion about this post