தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், காரையாரில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீடித்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக பெய்த தொடர் மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், தாமிரபரணி ஆற்றில் கடந்த 28-ம் தேதி முதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், காரையாரில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் பாலமும், முண்டந்துறை பாலமும் மூழ்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி கடந்த 28ம் தேதி முதல் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இந்த தடை நீடித்து வருகிறது. அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு 11வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post