தமிழகத்தில் இதுவரை 105 கோடியே 72 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்,விதிமுறை மீறல் தொடர்பாக 3 ஆயிரத்து 839 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் 37 லட்சம் ரூபாயும், தர்மபுரியில் 5 கோடியே 32 லட்ச ரூபாயும், கடலூரில் ஒரு கோடியே 50 லட்ச ரூபாயும் கைப்பற்றப்பட்டுள்ளதா தெரிவித்துள்ளார்.
மேலும், 227 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 803 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வாகனம் பறிமுதல் தொடர்பாக 2 ஆயிரத்து 346 வழக்குகள் உள்பட தேர்தல் தொடர்பாக மொத்தம் 3 ஆயிரத்து 839 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை மூலம் 49 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தேர்தல் பாதுகாப்பிற்காக 150 கம்பெனி மத்திய போலீசார் தமிழகம் வந்துள்ளதாகவும் அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Discussion about this post