காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி உள்ள நிலையில், நிரந்தர தலைவரை நியமிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோனியா காந்தி கட்சியின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அண்மையில் நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால், மீண்டும் ராகுல் காந்தியை தலைவராக நியமிப்பது குறித்து கட்சித் தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
இதனிடையே, புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையில், தேர்தல் நடத்த வேண்டும் என காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு அந்த கட்சியின் எம்.பி. சசிதரூர் வலியுறுத்தி உள்ளார். அதே நேரத்தில் ராகுல் காந்தியை தவிர வேறு யாராலும் கட்சியை வழிநடத்த முடியாது என கட்சித் தலைவர்கள் சிலர் கருதுவதால், நிரந்தர தலைவரை நியமிப்பதில் காங்கிரசில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
Discussion about this post