திருச்சியில் மரச்செக்கு எண்ணெய் நிறுவனத்தில் கலப்படம் நடந்ததால் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நிறுவனத்திற்கு சீல் வைத்தனர்.
எடமலைப்பட்டியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட மரச்செக்கு எண்ணெய் நிறுவனத்தில் கலப்படம் நடப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து எண்ணெய் நிறுவனத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் சுகாதாரமற்ற முறையில் கலப்படம் செய்து எண்ணெய் தயாரிப்பது தெரியவந்தது. இதனையடுத்து எண்ணெய் நிறுவனத்தை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள், திருச்சி மாவட்டத்திலுள்ள மற்ற எண்ணெய் நிறுவனங்களிலும் ஆய்வு நடத்தி கலப்படம் செய்வது உறுதியானால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post