தாராபுரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய தலைவர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், விநாயகர் சிலைகள் எந்தெந்த இடங்களில் வைக்கப்பட்டதோ, கரைக்கப்பட்டதோ அதே இடங்களில் தான், நடப்பாண்டும் கரைக்க வேண்டுமெனஅறிவுறுத்தப்பட்டது. மேலும் ஊர்வலத்தை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் நடத்துவது குறித்து அறிவுரைகளும் வழங்கப்பட்டது. காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
Discussion about this post