வாக்கு எண்ணிக்கை குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் வரும் 15ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் மே 23ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையை பிரச்னை இல்லாமல் எவ்வாறு நடத்துவது என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் துணை ஆணையர் சந்தீப் சக்சேனா ஆலோசனை வழங்கவுள்ளார். வரும் மே 15ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாதிரி வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
Discussion about this post