திருவண்ணாமலை மாவட்டம் ரேணுகாம்பாள் ஆலய திருவிழா ஏற்பாடுகள் குறித்து கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டம் அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில் ஆடி வெள்ளி திருவிழா, வரும் ஆடி மூன்றாம் தேதி தொடங்கி, ஆவணி 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால், பக்தர்களுக்கான பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன், கலசப்பாக்கம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
கூட்டத்தில் குடிநீர் வசதி, தங்கும் இடம், கழிவறை, பொருட்கள் பாதுகாக்கும் வசதி, போக்குவரத்து, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Discussion about this post