ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில்வே பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ராமேஸ்வரத்தையும் – மண்டபம் பகுதியையும் இணைக்கும் வகையில் கடலில் 2 புள்ளி 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாம்பன் ரயில் பாலம் உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு பாலத்தின் நடுவில் உள்ள தூக்குப்பாலம் வலுவிழந்ததால், ராமேஸ்வரத்துக்கு 83 நாட்கள் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து, பாம்பன் புதிய ரயில் பாலம் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதிய பாலத்தில் 141 தூண்களும், 20 மீட்டர் உயரத்தில் தூக்கு பாலமும் அமைக்கப்பட உள்ளது. இரண்டு ஆண்டுகளில் பாலம் கட்டும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Discussion about this post