சென்னை திருவொற்றியூரில் 200 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மீன்பிடித் துறைமுகம் கட்டும் பணிக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கல் நாட்டினார்.
சென்னை திருவொற்றியூரில் புதிய சூரை மீன்பிடித் துறைமுகம் கட்டப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. துறைமுகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இதில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் புதிய துறைமுகத்திற்கான பூமி பூஜை நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். இதில் அரசு அதிகரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள், மீனவர்கள் பங்கேற்றனர்.
Discussion about this post