அண்டார்டிக்கா பனிக்கண்டத்தில் வெப்பநிலை 2தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அண்டார்டிக்கா, புவியின் தென் முனையில் உள்ள பனிக் கண்டம். இங்கு சூரிய வெளிச்சம் படுவதே குறைவானதாக இருக்கும் இதனால் மொத்த கண்டமும் பனிக்கட்டிகளால் சூழ்ந்து காணப்படும். இங்கு நிரந்தர மக்கள் குடியிருப்பு என எதுவும் கிடையாது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வுக் கூடங்கள் மட்டுமே அண்டார்டிக்காவில் இருந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் புவி வெப்ப மயமாதலால் அண்டார்டிக்காவின் பனிப்பாறைகள் உருகி கடல் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது அண்டார்டிக்கா கண்டத்தின் வரலாற்றில் கடந்த வாரம் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் நியூயார்க், கோடைக்காலங்களில் கடுமையான வெப்பத்தைச் சந்திக்கும் ஒரு நகரம். நியூயார்க்கை விட அண்டார்டிக்காவில் கடந்த வார இறுதியில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றது. அண்டார்டிக்கா வரலாற்றிலேயே இவ்வளவு அதிக வெப்பநிலை பதிவானது இதுவே முதல்முறை. வரும் காலங்களில் இந்த அளவு தொடர்ந்து அதிகரிக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அண்டார்டிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள டிரினிட்டி தீபகற்பத்தில் இருக்கும் எஸ்பெரான்சா பேஸ் (Esperanza Base) பகுதியில் உள்ள அர்ஜெண்டினா ஆய்வு மையம் இந்த வெப்பநிலையை பதிவுசெய்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு எஸ்பெரான்சா பேஸ் பகுதியில் 63.5 டிகிரி வெப்பநிலை பதிவாகியிருந்தது, அதன் பிறகு தற்போது அதிகரித்துள்ளது.
அண்டார்டிக்காவின் இந்த வெப்பநிலை எதிர்பார்த்த ஒன்றுதான். பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரும் மாற்றம் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். கண்டங்களில் வெப்பநிலை உயர்வு என்பது வழக்கமானது என வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
உலகிலேயே அண்டார்டிக்காதான் வேகமாக உருகும் கண்டமாக உள்ளது. இதனால் கடந்த 50 ஆண்டுகளில் டிரினிட்டி தீபகற்பத்தில் மட்டும் 87% பனிப்பாறைகள் உருகியுள்ளதாகும் அதிலும் கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் இது மேலும் அதிகரித்துள்ளதாகவும் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் பனிப்பாறை உருகுவது பெரிய பிரச்னை இல்லை. ஆனால் அதனுடைய அளவு அதிகரித்து வருவதுதான் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.வெப்பநிலை உயர்வு என்பது அண்டார்டிக்காவில் மட்டுமல்ல பொதுவாக உலகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய இந்த நிகழ்வுக்கு மனித சமூதாயம் என்ன பதில் கூறப் போகிறது ? என்பதை காலம் தான் பதில் கூற வேண்டும்.
Discussion about this post