இந்தி படங்களில் தான் பணியாற்றுவதற்கு எதிராக சதி நடப்பதாக, ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 ஆண்டுகளாக திரை இசையில் கோலோச்சி வரும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியில் குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே பணியாற்றியுள்ளார். இந்தநிலையில் வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்திப் படங்களில் தான் பணியாற்றுவதற்கு எதிராக ஒரு கூட்டம் செயல்படுவதாக கூறியுள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தில் பெச்சாரோ’ படத்தின் இயக்குனர் தன்னை சந்தித்த போது, பலரும் ரஹ்மானிடம் செல்ல வேண்டாம் என கூறியதாகவும், சிலர் அவரை தடுத்ததாகவும் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார். தனக்கு வரும் நல்ல பட வாய்ப்புகளை பறிக்க ஒரு கும்பல் காத்திருப்பதாகவும் ரஹ்மான் கூறியுள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டதற்கு இந்தி திரையுலகில் அவர் புறக்கணிக்கப்பட்டதே காரணம் என்ற கருத்து நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில், ஏ.ஆர். ரஹ்மானும் இதே நிலைக்கு ஆளாகியுள்ளார் என்ற செய்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post