பழனி கோயிலில் உள்ள பழமையான நவபாஷாண சிலையை கடத்தும் நோக்கிலேயே ஐம்பொன்சிலை செய்யப்பட்டுள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவிலில் போகர் சித்தர் உருவாக்கி பிரதிஷ்டை செய்துள்ள பழமையான நவபாஷாண முருகன் சிலையை கடத்தும் நோக்கத்தில் மிகப்பெரிய சதி நடந்தது உறுதியாகியுள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்புப்பரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி முகேஷ் ஜெயராம், நவபாஷாண சிலையை மாற்ற முதன்முதலில் அடிகோலிட்டவர் ஸ்தபதி முத்தையா என்பது புலன் விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார். இது தொடர்பாக விரைவில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post