பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் நிலை உள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 650 தொகுதிகளுக்கும் நேற்றுத் தேர்தல் நடைபெற்றது. இதில் கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிலாளர்கட்சி, ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி உள்ளிட்டவற்றின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலுக்கப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 368 இடங்களைக் கைப்பற்றும் எனக் கூறப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்ததுமே இரவே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பத்தரை மணி நிலவரப்படி கன்சர்வேட்டிவ் கட்சி 340க்கு மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தொழிலாளர் கட்சி 200 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி நாற்பதுக்கு மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. லிபரல் ஜனநாயகக் கட்சி 9 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
Discussion about this post