காங்கிரசின் தேர்தல் அறிக்கை, ராணுவம் மற்றும் காஷ்மீர் மாவட்ட நிர்வாகத்தை பலவீனப்படுத்தும் விதத்தில் உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.
டெல்லியில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ராணுவத்திற்கு எதிராக உள்ளதாகவும், பயங்கரவாதிகளையும், பிரிவினைவாதிகளையும் ஊக்குவிக்கும் விதமாக உள்ளதாகவும் விமர்சித்தார். இந்திய ராணுவத்தின் மாண்பை கெடுக்கவும், காஷ்மீரில் ராணுவத்தை தண்டிக்கவும் காங்கிரஸ் கட்சி விரும்புவதாகவும் குறிப்பிட்டார். ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை அகற்ற வேண்டுமெனில், அதற்கென ஒரு முறை உள்ளது எனவும், இதற்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
Discussion about this post