கன்னியாகுமரி அருகே, வீட்டில் பிரிண்டரை வைத்து, கள்ள நோட்டுகள் அடித்த காங்கிரஸ் பிரமுகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த பிணந்தோடு பகுதியில், ஒருவர் பெட்ரோல் பங்கில், பெட்ரோல் நிரப்பியதற்காக பணம் கொடுத்து உள்ளார். அந்த பணம் கள்ள நோட்டு என்று தெரிய வரவே காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பணம்,அவர் பணி புரியும் வெல்டிங் ஒர்க் ஷாப் உரிமையாளரும் காங்கிரஸ் பிரமுகருமான ஜார்ஜ் என்பவர் கொடுத்த பணம் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர், ஜார்ஜின் வீட்டில் அதிரடி சோதனை செய்து, கள்ள நோட்டு அடிப்பதற்கு பயன்படுத்திய பிரிண்டிங் மெஷின், 26 ஆயிரம் ரூபாய் அளவிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனர். மேலும், அவை, தேர்தலுக்காக, வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைத்திருந்த கள்ள நோட்டுக்களா என்ற நோக்கில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post