தேர்தல் படுதோல்வியை அடுத்து ஊடக விவாதங்களில் பங்கேற்க காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களுக்கு தடை விதித்து, காங்கிரஸ் மேலிடம் உத்தவிட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து அக்கட்சி மூத்த தலவைர்களை விமர்சித்த ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்யவும் முடிவு செய்தார். இதனால் காங்கிரஸ் கட்சியினரிடயே சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் ஊடக விவாதங்களில் ஒரு மாதகாலம் பங்கேற்க தடை விதித்துள்ளது. இதனை அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தனது டுவீட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
Discussion about this post