நாங்குநேரி தொகுதிக்குள் அத்துமீறி நுழைய முயன்ற காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாங்குநேரியில் இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வெளியாட்கள் தொகுதிக்குள் நுழைய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த விதிமுறைகளை மீறி தொகுதிக்குள் நுழைய முயன்ற காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து விதிமுறைகளை மீற முயன்ற வசந்தகுமாரை கைது செய்த காவல்துறையினர், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.