திருச்செங்கோட்டில் 25க்கும் மேற்பட்ட வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் காற்று ஒலிப்பான்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து திருச்செங்கோடு வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கடந்த இரு தினங்களாக வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
இதில், தகுதிச்சான்று புதுப்பிக்காத 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாகனங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது 25 பேருந்துகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்ட காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளர் மற்றும் ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Discussion about this post