செங்கோட்டையில் ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள 6 மூட்டை புகையிலைப் பொருட்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்துச் செங்கோட்டையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோவில் கொண்டு வரப்பட்ட 6 மூட்டை புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். விசாரணையில் தென்காசி அருகே உள்ள கிடங்கில் இருந்து புகையிலைப் பொருட்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது.
Discussion about this post