அயோத்தி வழக்கில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய, சமரசம் காண முடியவில்லை என மத்தியஸ்தர்கள் குழு கூறினால், வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், தற்போது மத்தியஸ்தர்கள் குழுவால் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக சுமுக தீர்வு காண்பதற்காக, நீதிபதி கலிபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவை நியமனம் செய்த உச்சநீதிமன்றம், ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் தீர்வு காணும் படி அவகாசம் அளித்திருந்தது.
அதன்படி ஜூலை 11ம் தேதி இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்திருந்த பொழுது, அயோத்தி வழக்கில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய சமரசக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தீர்வு காண முடியவில்லை என மத்தியஸ்தர் குழு கூறினால், 25-ம் தேதி முதல் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்திருந்தது.
இந்நிலையில், இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில், பேச்சுவார்த்தை குழு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதைத் தெடர்ந்து, சமரசக் குழு தனது பணியைத் தொடரலாம் என்று கூறியுள்ள நீதிமன்றம், குழுவின் அறிக்கை ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், வழக்கை ஆகஸ்ட் 2க்கு ஒத்திவைப்பதாக தெரிவித்த உச்சநீதிமன்றம், அன்றைய தினம் ஜூலை31ம் தேதி வரையிலான அறிக்கையை பேச்சுவார்த்தை குழு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
Discussion about this post