தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து நேற்று மண்டலாபிஷேகம் தொடங்கியது.
23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து தற்போது மண்டலாபிஷேகம் துவங்கியது.
இதில் பெருவுடையார், பெரியநாயகி உட்பட அனைத்து தெய்வத் திருமேனிகளுக்கு பால், மூலிகை எண்ணெயில் அபிஷேகம் செய்யப்பட்டது. மண்டலாபிஷேகம் வழக்கமாக 48 நாட்கள் நடைபெறும்.
இந்நிலையில் மார்ச் 22ம் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெறவுள்ளதாலும், சித்திரை திருவிழா காப்பு கட்டும் விழா நடைபெற உள்ளதாலும் மண்டலாபிஷேகம் 24 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று பிரதோஷம் என்பதால், நந்திகேஸ்வரருக்கு பால், மூலிகை எண்ணெய் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு, பின் மாலை சூட்டி தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
Discussion about this post