மேட்டூரில் 600 மெகாவாட் கொண்ட அனல்மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நிறைவடைந்து ஒரு மதத்திற்கு பிறகு இன்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், மேட்டூரில் 840 மெகாவாட் மற்றும் 600 மெகாவாட் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன . 840 மெகாவாட் கொண்ட அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் வீதம் 4 அலகுகள் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு அனல் மின் நிலையத்திலும் நாள் ஒன்றுக்கு 23 ஆயிரம் டன் நிலக்கரி எரிக்கப்பட்டு 1, 440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை 18ம் தேதி 600 மெகாவாட் அனல்மின் நிலத்தில் ஆண்டு பராமரிப்பு பணி நடைபெற்றது. தற்போது பராமரிப்பு பணி நிறைவடைந்து ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
Discussion about this post