கோவையில் ஓட்டு கேட்பின் போது வாக்களர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக வழக்கறிஞர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் சண்முக சுந்தரத்தை ஆதரித்து திமுக வினர் வாக்கு சேகரித்தனர். அப்போது வாக்களர்களுக்கு ஓட்டுக்கு 250 ரூபாய் பண வினியோகம் செய்து வாக்கு சேகரித்து வருவதாகவும், தேர்தல் சட்ட விதிகளை மீறி ஆட்டோ மற்றும் அதிகளவு இருசக்கர வாகனத்தில் பிரசாரம் செய்து வருவதாகவும் கூறி அதிமுக வழக்கறிஞர் அணியினர் புகார் அளித்தனர். மேலும், இவர்கள் மீது தேர்தல் வீதிமீறல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்துள்ளனர்.
Discussion about this post