சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை அவமதித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் சுதந்திர தினத்தன்று, ஸ்டாலின் கையுறை அணிந்துகொண்டு கொடியேற்றிய பின்னர், தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தாமல் உடனடியாக அங்கிருந்து சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்பு சட்டம் 1971-ன் கீழ் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையரிடம் அதிமுக சட்டப்பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல் இந்த புகார் மனுவை அளித்துள்ளார். ஸ்டாலின் மட்டுமல்லாமல், கொடியேற்றும் நிகழ்வில் பங்கேற்ற அனைவருமே தேசியகொடிக்கு மரியாதை செலுத்தாமல், அங்கிருந்து புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post