செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூரில் தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக அடியாட்களுடன் பொதுமக்களை மிரட்டும் திமுக பிரமுகரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெருங்களத்தூரில் தனியார் ஐடி நிறுவன வளாகத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் கட்டுமான இடங்களில் தேங்கிய நீரை அந்நிறுவனம் மோட்டார் மூலம், பீர்க்கன்கரணை குடியிருப்பு பகுதியில் வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதனால் அவதியடைந்த அப்பகுதி மக்கள் தனியார் நிறுவனத்தை, முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆய்வு என்ற பெயரில் அடியாட்களுடன் வந்த தாம்பரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டதுடன், பொதுமக்களுடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் பொதுமக்களை ஒருமையில், தகாத வார்த்தைகளால் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா மற்றும் அவரது அடியாட்கள் மக்களை தாக்க முற்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Discussion about this post