பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழு அமைக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்
தமிழக சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், பெரம்பலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. தமிழ்செல்வன், பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்று பேசினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, பத்திரிகையாளருக்கு நல வாரியம் அமைப்பது தொடர்பாக, சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழு அமைக்கப்படும் என்றும், இக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நல வாரியம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post