மேட்டூர் அணையின் காவிரி கரையோர பகுதியை, ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு மேற்கொள்ளும் பணி துவங்கியது.
மழை காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது கரையோர மக்கள் பாதிப்புக்குள்ளாவதை தடுக்கவும், ஆற்றுப்படுகைகள் நீர்நிலை பகுதிகளை சரியாக பராமரிப்பு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி புகைப்பட ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள தொழில்நுட்ப பணியாளர்கள், தனித்தனி குழுக்களாக பிரிந்து, தமிழகம் முழுவதும் உள்ள ஆற்றுப்படுகைகளில் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி புகைப்பட ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் காவிரி ஆறு பாய்ந்து ஓடும் தொட்டில்கட்டி கரையோரப் பகுதியில், ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு மேற்கொள்ளும் பணி துவங்கியது. பின்னர், தாக்கல் செய்யப்படும் ஆய்வறிக்கையின் படி, ஆற்றங்கரையோர பகுதிகளில் கரையை பலப்படுத்துதல், அணைகளை கட்டுவது போன்ற பணிகள் அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்படும்.
Discussion about this post