ஓட்டப்பிடாரம் ஒன்றிய அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் தேர்தல் முடிந்த பின் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் மோகனுக்குஆதரவாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, வீரபாண்டியபுரம், வி.பி.தாழையூத்து, கோபாலபுரம், கொத்தாளி, அம்மாள்பட்டி ஆகிய இடங்களில் அமைச்சர் கடம்பூர் ராஜூ வீதிவிதியாக சென்று இரட்டை இலைச்சின்னத்திற்கு வாக்குசேகரித்தார். அப்போது பேசிய அவர் ஓட்டப்பிடாரம் ஒன்றிய அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டம், தேர்தல் முடிந்த பின் நடைமுறைப்படுத்தப்படும் என்றார். இந்நிகழ்வில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
Discussion about this post