இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையில், பாகிஸ்தான் சர்வதேச நெறிமுறைகளை மீறி வருவதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ், இந்தியாவின் உளவு அமைப்பான ரா-வின் மூலம், பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக, கடந்த 2016ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த இந்தியா, மரண தண்டனை விதித்ததை எதிர்த்து, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்தியா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷனிண் மரண தண்டனையை நிறுத்தி வைத்தது. இரு தரப்பிலும் விரிவான மனுக்கள் மற்றும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, சர்வதேச நீதிமன்றத்தின் 10 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணை தொடங்கியது. இதில், பாகிஸ்தான் சர்வதேச நெறிமுறைகளை மீறி வருவதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Discussion about this post