ஒரே பயிரை சாகுபடி செய்து அதனால் நஷ்டம் ஏற்பட்டுவதாக விவசாயிகள் வேதனைப்படும் நிலையில், அதற்கு மாற்றாக கோழிக்கொண்டை பூ பயிர் சாகுபடியில் லாபம் ஈட்டி வரும் விவசாய தம்பதிகள் குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மலர் சாகுபடி பிரதான தொழிலாக இருந்து வருகிறது. பண்டிகள் மற்றும் திருவிழா நாட்களில் பயனபடுத்தப்படும் பூக்கள் இங்கிருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சித்தம்பலம் கிராமத்தில் வசித்து வரும் கந்தசாமி-ராஜேஷ்வரி தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் முருங்கை, மக்காச்சோளம்,அகத்திக்கீரை, உள்ளிட்ட பயிர்களோடு சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் கோழிக்கொண்டை பூச்செடியை சாகுபடி செய்து வருகின்றனர். பல தலைமுறைகளாக கோழி கொண்ட பூவை சாகுபடி செய்து வரும் இந்த தம்பதியினர், அதிக மகசூலை பெற்று வருகின்றனர். பொதுவாக மலர் சாகுபடிக்கு ஆகும் செலவு மிக குறைவு என்றாலும், கோழிக்கொண்டை பூவின் சாகுபடிக்கும் ஆகும் செலவு அதைவிட குறைவு என்பதே தம்பதிகளின் கருத்தாக உள்ளது.
முறையாகப் பராமரித்து 60 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் இந்த பூக்கள் தொடர்ந்து, 90 நாட்கள் வரை மூன்று அருவடையாக கிடைக்கிறது. ஒரு கிலோ பூ அதிகபட்சமாக 60 ரூபாய் வரை
விலை போகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாக கூறும் இந்த தம்பதியினர் மற்ற விவசாயிகளுக்கும் முன் மாதிரியாக திகழ்கின்றனர்.
Discussion about this post