பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கோடை விடுமுறை முடிவுற்று வரும் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இந்தநிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்ட பள்ளி வாகனங்களை, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, போக்குவரத்து துறை அதிகாரிகள், காவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Discussion about this post