மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், அதை மக்கள் எதிர்த்தவுடன், பின் வாங்கி ஓடுவதும் விடியா ஆட்சியில் தொடர்கதை ஆகி வருகிறது. டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பல்வேறு பகுதிகளில் மக்கள் போராடி வரும் நிலையில் குடியரசு தினவிழாவின்போது, அதிக அளவில் டாஸ்மாக் மதுவிற்பனை செய்த ஊழியர்களைப் பாராட்டி கரூர் ஆட்சியர் விருது வழங்கிய சம்பவம் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள், விடியா திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இதனை அடுத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் திரும்பப்பெறப்பட்டுள்ளன.
Discussion about this post