இன்றைய தலைமுறையினரிடம், காபி குடிக்கும் பழக்கம் தீவிரமாக தொற்றிக் கொண்டிருக்கின்றது. காலை, மாலையில் மட்டும் டீ, காபி அருந்தி வந்த நிலையில், தற்போது நேரங்காலம் மறந்து உற்சாக பானமாக நினைத்து அருந்தவதை வழக்கமாகவே கொண்டிருக்கின்றனர் இன்றைய இளைஞர்கள். இது உற்சாகத்தை கொடுத்தாலும், மறுபக்கம் விடிய விடிய தூங்க முடியாத சூழ்நிலை சிலருக்கு ஏற்படுத்தி வருகிறது.
காபி குடிப்பது இளம் வயதினருக்கு வேண்டுமானால் உடல் சார்ந்த பிரச்சனைகளை குறைவாக ஏற்படுத்தலாம். ஆனால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற இணை நோய் உள்ளவர்களுக்கு, காபி அருந்துவதால் தூக்கமின்மை, பசியின்மை பிரச்சனைகள் உள்பட பல்வேறு வியாதிகளை ஏற்படுத்தி விடும் என்று கூறப்படுகின்றது. குறிப்பாக 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பெரும் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும்.
உலகளவில் அதிகப்படியான மக்கள் விரும்பி அருந்தும், காபி மற்றும் கார்பன் ஏற்றப்பட்ட புத்துணர்ச்சி பானங்களில், பொதுவான மூலப்பொருளான காபின் அதிகளவில் காணப்படுகிறது. அண்மைக்காலமாக குழந்தைகள் இதுபோன்ற பானங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். காபியிலும் இரண்டற கலந்துள்ள காபின் மூலப்பொருளால், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அருந்தும்போது, ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பை அதிகரிக்க செய்து, தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தி விடுவதாக எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
இதே போன்று அனைத்து உணவு பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு செய்திகள் அவ்வப்போது வெளி வரும் நிலையில், எந்த உணவையும் அளவோடு எடுத்துக்கொண்டால், நலமுடன் வாழலாம் என்பதில் சந்தேகமில்லை.
Discussion about this post